மணிரத்னத்துடன் மீண்டும் இணையும் நித்யாமேனன்

299

ஓ காதல் கண்மணி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தான் இயக்கப் போகும் அடுத்த படத்திலும் நித்யா மேனனுக்கு வாய்ப்பளித்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். இந்த ஆண்டு(2015) ஏப்ரல் மாதத்தில் வெளிவந்த “ஓ காதல் கண்மணி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக மாறியது. ஓ காதல் கண்மணி படத்தைத் தொடர்ந்து சில மாதங்கள் ஓய்வுக்குப் பின் தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் மணிரத்னம். இந்தப் படத்தில் துல்கர் சல்மான், கார்த்தி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கவிருக்கின்றனர். மற்றொரு நாயகிக்கான தேடல் நடைபெற்று வந்த நிலையில் தற்போது நித்யாமேனன் இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. பழிவாங்கும் த்ரில்லர் வகை கதையாக இந்தப் படத்தை உருவாக்கவிருக்கிறார் மணிரத்னம். இன்னும் ஒரு சில தினங்களில் படத்தில் நடிப்பவர்கள் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகலாம். நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் மாதத்தில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படவிருக்கிறது. ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் “இசைப்புயல்” ஏ.ஆர்.ரகுமான். ஓ காதல் கண்மணி படத்தைத் தொடர்ந்து 2 வது முறையாக நித்யாமேனன், துல்கர் சல்மான், மணிரத்னம் மூவரும் இந்தப் படத்தின் மூலம் இணையவிருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE