மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிக்கப்போகும் ஜனாதிபதி

393

விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்பட்டு 05 ஆண்டுகளை எட்டவுள்ள இந்நிலையில் இன்னமும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இழுபறி நிலையே தோன்றியுள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தாக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும், காணாமற்போனோருக்கான பிரஜைகள் குழுத் தலைவர் தாக்கப்பட்டதும், காணாமற்போனோரின் குடும்பங்களை இராணுவப்புலனாய்வினர் சென்று அச்சுறுத்துவதும் தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. இதுவரையில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமற்போயுள்ளதாகவும், ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகவும், காணாமற்போனோருக்கான அமைப்புக்கள் இத் தகவல்களை வெளியிட்டிருக்கும் அதேநேரம் மொத்தமாக இறுதி யுத்தத்தின்போது ஒரு இலட்சத்து என்பதாயிரத்திற்கும் அதிகமானோர் காணாமற்போயும் கொல்லப்பட்டும் இருக்கின்றார்கள் என்பதுதான் உண்மையான விடயம்.

Thevarajah2

இவ்விடயம் தொடர்பாக பல்வேறு விடயங்கள் மஹிந்த அரசினால் மூடிமறைக்கப்பட்டுள்ளன. ஹிட்லர், சதாம் ஹூசைன், தற்போதுள்ள நரேந்திரமோடி அந்த வரிசையில் மஹிந்த ராஜபக்ஷவும் உள்ளடக்கப்படுகின்றார். துமிழினம் அழிக்கப்பட்டதற்காக பிரயாசித்தம் தேடும் வகையில் பல்வேறு அபிவிருத்திப்பணிகளை வடகிழக்கில் முன்னெடுத்தாலும் ஐ.நாவின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்க முடியாது என ஆய்வாரள்கள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அடுத்த ஐ.நாவின் கூட்டத்தொடரில் மூன்று நாடுகள் விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளது. அதில் இலங்கை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் தனது சர்வாதிகார செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாக வருவதற்கு மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருகின்றார். இந்நிலையில் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைக்கு தீர்வு தான் என்ன?

SHARE