மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி: முக்கிய தொகுதிகளில் ஐ.தே.க முன்னணி! பொன்சேகாவுக்கு 3 ஆசனங்கள்

787
ranil-unp

மேல் மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றியீட்டியுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி முன்னணி வகித்து வருவதகாத் தெரிவிக்கப்படுகிறது.

கம்பஹா மாவட்ட முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு: 582,668 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி: 249,220 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி: 88,557 வாக்குகள்.
ஜே.வி.பி: 56,405 வாக்குகள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்: 17,296 வாக்குகள்

களுத்துறை மாவட்ட தேர்தல் முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு: 337,924 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி: 144,924 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி: 43,685 வாக்குகள்
ஜே.வி.பி: 25,366 வாக்குகள்

கொழும்பு மாவட்ட முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு: 443083 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி: 285538 வாக்குகள்
ஜே.வி.பி: 74,437 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி: 71,525 வாக்குகள்
ஜனநாயகக் மக்கள் முன்னணி: 44,156 வாக்குகள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்: 20,163 வாக்குகள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்: 15,491 வாக்குகள்

இதன்படி, மேல் மாகாணசபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மொத்தமாக மூன்று மாவட்டங்களிலும் இரண்டு போனஸ் ஆசனங்களுடன் 56 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சி 28 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. ஜனநாயகக் கட்சி 9 ஆசனங்களையும். ஜே.வி.பி. 6 ஆசனங்கள், ஜனநாயக மக்கள் முன்னணி 2 ஆசனங்கள்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2 ஆசனங்கள் மற்றும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

கொழும்பின் சில முக்கிய பகுதிகளில் ஐ.தே.க முன்னணி

சில தேர்தல் தொகுதிகளில் ஆளும் கட்சி வெற்றியீட்டிய போதிலும்,  கொழும்பு மாவட்டத்திய முக்கிய தொகுதிகளில் ஆளும் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சி பின்தள்ளியுள்ளது.

மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சி மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகளினது வாக்குகளும் அதிகரித்துள்ளன.

தெஹிவளை, இரத்மலானை, கொலன்னாவை, அவிசாவலை, கடுவல, கோட்டே, மஹரகம, மொரட்டுவ, ஹோமாகம ஆகிய தொகுதிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முன்னணி வகிக்கின்றது.

எனினும், கொழும்பு மத்தி,  பொரளை, கொழும்பு மேற்கு,  கொழும்பு கிழக்கு மற்றும் கொழும்பு வடக்கு ஆகிய தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி முன்னணி வகிக்கின்றது.

கொழும்பில் பொன்சேகாவுக்கு 3 ஆசனங்கள்

மேல் மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் படி கொழும்பு மாவட்டத்தில் மொத்தமுள்ள 39 ஆசனங்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 18 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 12 ஆசனங்களையும் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி மூன்று ஆசனங்களையும் ஜே.வி.பி மூன்று ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

அத்துடன் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பு மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை மட்டுமே கைப்பற்றியது.

அதேவேளை கம்பஹா மாவட்டத்தின் தேர்தல் முடிவுகளின்படி ஆளும் கட்சி 23 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 10 ஆசனங்களையும், ஜனநாயகக் கட்சி 4 ஆசனங்களையும் ஜே.வி.பி இரண்டு ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

2009 ம் ஆண்டு தேர்தல் முடிவுகளின் பிரகாரம்இ ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பின்னடைவை சந்தித்துள்ளது.

கடந்த முறை 27 ஆசனங்களை கைப்பற்றிய ஆளும் கட்சி இம்முறை 23 ஆசனங்களை மாத்திரமே கைப்பற்றியுள்ளது. முதல் முறையாக கம்பஹா மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி 4 ஆசனங்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

ஆளும் கட்சிக்கு 41 ஆயிரத்து 862 வாக்குகள் குறைந்துள்ளதுடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த வாக்குகள் 12 ஆயிரத்து 964 ஆக அதிகரித்துள்ளன.

அத்துடன் ஜே.வி.பியின் வாக்குகளும் 34 ஆயிரத்து 9145 ஆக அதிகரித்துள்ளது.

முஸ்லிம் காங்கிரஸிக்கு கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் 718 வாக்குகள் குறைவாகவே கிடைத்துள்ளன.

 

SHARE