மாணவியை துஷ்பிரயோகம் செய்த அதிபர் ஆசிரியை விளக்கமறியல்…

604

கினிகத்ஹேன பொலிஸ் பிரிவிக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த 16 வயது மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு உதவி செய்த அதிபர் மற்றும் ஆசிரியையை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்ற மாவட்ட நீதிபதியும் நீதவானுமாகிய அமில ஆரியசேன இன்று செவ்வாய்கிழமை (22) உத்தரவிட்டுள்ளார்

கடந்த 2007.11.12.அன்று குறித்த பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்று வந்த மாணவியை அப்பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குறித்த மாணவியினால் கினிகத்ஹேன பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டது.

இதன் படி பிரதான சந்தேகநபர் மீதான வழக்கு விசாரணைகள் நுவரெலியா நீதிமன்றத்தில் இடம் பெற்று வருகின்றன.

இந்நிலையில் குறித்த சம்பவத்திற்கு உதவி செய்த அதிபர் மற்றும் ஆசிரியைக்கு எதிராக ஹட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் 05 ஆம் திகதி வழங்கப்படுமென ஹட்டன் நீதிமன்ற நீதவான் அமில் ஆரியசேன தெரிவித்தார்.

SHARE