மான்செஸ்டர் யுனைடெட் அணியின் போட்டியை பார்க்க கிளம்பிய ஜெயவர்த்தனே: யாருடன் தெரியுமா?

356
இலங்கை அணியின் முன்னாள் தலைவரான ஜெயவர்த்தனே மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் தீவிர ரசிகர்.இவர் சில தினங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் நடந்த டி20 காட்சி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றார்.

இந்நிலையில் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரின் நேற்று நடந்த சவுத்தாம்ப்டன் – மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதிய போட்டியை காணச் சென்றுள்ளார்.

இவர் இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் டேவிட் பெக்காமின் தந்தை டெட் உடன் போட்டியை ரசிக்க சென்றுள்ளார்.

இருவரும் காரில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

இதைப் பார்த்து ஆச்சரியமடைந்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

CPWXu0AWIAA5YHh

 

SHARE