மாயமான மலேசிய விமானத்தை தொடர்ந்து தற்போது மலேசிய போர்க்கப்பல் ஒன்று காணாமல் போயுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 8ம் திகதி MH 370 மலேசிய விமானம் நடுவானில் மாயமானதை போல் தற்போது அந்நாட்டு கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் ஒன்று 7 பணியாளர்களுடன் மாயமாகியுள்ளது.
சி.பி.90.ஹெச் என்ற போர்க்கப்பல் நேற்று முன் தினம் புலாவ் லயாங் லயாங் (Layang Layang) பவளத்தீவு நோக்கி வழக்கமான ரோந்துப் பணிக்கு சென்றபோது திடீரென ரேடாரில் இருந்து காணாமல் போனது.
மோசமான வானிலை நிலவுவதால் ரோந்து பணியிலிருந்து திரும்ப அனுமதிக்குமாறு கடைசி அழைப்பு வந்த நிலையில், அந்த கப்பல் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது அந்த போர்கப்பலை தேடும் பணியில் விமானப்படை விமானங்கள் உட்பட 3 போர் கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.