கடந்த வருடம் நடைபெற்ற க. பொ. த. (உயர்தரப்) பரீட்சையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களும் தோற்றி இருந்தனர். இவர்களில் 132 பேர் தற்போது பல்கலைக்கழங்களுக்குத் தெரிவாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜகத் விஜேதிலக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 12,081 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களில் 650 பேர் சிவில் பாதுகாப்புப் படையணியில் இணைந்து பணிபுரிவதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் ஜகத் விஜேதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்.