முஸ்லிம் நாடுகளுடனான உறவின் பாதிப்பை இலங்கை சந்திக்க வேண்டி வரும்- ஞானசார தேரர்

599

தான் ஜனாதிபதியாக இருந்தால் மேற்கத்தேய நாடுகளுடன் நல்லுறவைப் பேணி இருப்பேனே தவிர, முஸ்லிம் நாடுகளுடன் இல்லை என்று பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கை சரியானது இல்லை. முஸ்லிம் நாடுகளுடன் இலங்கை அரசாங்கம் நல்லுறவை பேணி வருகிறது.

இதற்கு பதிலாக மேற்குலக நாடுகளுடன் சிறந்த உறவை பேணி வந்திருந்தால் தற்போது மனித உரிமைகள் சார்ந்த பல்வேறு விடயங்களில் சிக்கலை சந்தித்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

முஸ்லிம் நாடுகளுடனான உறவின் பாதிப்பை இலங்கை சந்திக்க வேண்டி வரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

1546063_10151812546671467_1046548694_n

SHARE