யாழில் முற்றுகை போராட்டம்-மீனவ சங்கங்கள் முடிவெடுப்பு

328
இலங்கை எல்லைக்குள் வருகைதந்து கடற்தொழிலில் ஈடுபடும் இந்திய இழுவைப்படகுகளை கண்டித்தும் அவற்றைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரியும் மாபெரும் முற்றுகைப்போராட்டம் நடத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 23ம் திகதி போராட்டத்தை நடத்த மீனவ சங்கங்கள் முடிவெடுத்துள்ளதாக யாழ் மீனவ சங்க தலைவர் எமிலியாம் பிள்ளை தெரிவித்துள்ளார்

இன்று யாழ்ப்பாணத்திலுள்ள மீனவ சங்கத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவை தாம் எடுத்துள்ளதாகவும் எதிர்வரும் 23ம் திகதி காலை யாழ் மாவட்ட செயலகம் மற்றும் கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களம் ஆகியவற்றை முற்றுகையிட்டு தாம் போராட்டம் நடாத்தப் போவதாகவும் அவர் தெரிவித்தார்

இன்று இடம்பெற்ற கூட்டத்தில் வடமாகணத்திலுள்ள 40 மீனவ சமாசங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர், அவர்கள் அனைவரது ஆலோசனைக்கு அமைவாகவே தாம் இப்போராட்டத்தை திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளதுடன்,

இலங்கை அரசாங்கம் விரைவில் தமக்கான தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க இந்தப் போராட்டத்தின் மூலம் வலியுறுத்த போவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் இனிவரும் காலங்களில் இந்திய அரசுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தைக்கும் செல்ல தாம் தயாரில்லை என்றும் மீனவர்கள் எல்லை தாண்டுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

SHARE