ரஜினியுடன் நடித்தது மறக்க முடியாத தருணங்கள்! -சோனாக்ஷி  

580

கோச்சாடையான் படத்தையடுத்து ரஜினி நடித்து வரும் படம் லிங்கா. இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் ரஜினி. அதில் முறுக்கு மீசை வைத்து கிராமத்து கெட்டப்பில் நடித்த ரஜினியுடன் இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா நடித்த காட்சிகள்தான் மே 2-ந்தேதியில் இருந்து நடந்து வந்தது. அதில் அவர்களது ரொமான்டிக்கான காட்சிகள் மட்டுமே தற்போது படமாக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்து லிங்கா படத்துக்காக பிரமாண்ட செட் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால், இனி அந்த லொகேஷன்களில் படப்பிடிப்பை நடத்தயிருக்கிறார்கள். அதனால், முதல் கட்டமாக தான் கொடுத்த 10 நாள் கால்சீட்டை முடித்து விட்டு வேறொரு இந்தி படத்தில் நடிப்பதற்காக மும்பை பறந்து விட்டார் சோனாக்ஷி.
இந்த நிலையில், மிகப்பெரிய நடிகர் ரஜினியுடன் தான் நடித்ததை பெருமையாக குறிப்பிட்டிருக்கிறார் அவர். அதில், ரஜினி போன்ற சூப்பர் ஸ்டார் நடிகருடன் சினிமாவுக்கு வந்த சில ஆண்டுகளிலேயே எனக்கு நடிக்க சான்ஸ் கிடைத்து நிஜமாகவே சந்தோசமான விசயம். அவர் என் தந்தை சத்ருகன் சின்ஹாவுக்கு நண்பர் என்பதால் அது எளிதில் சாத்தியமாயிற்று.
மேலும், சீனியர் நடிகரான அவருடன் நடித்த அந்த தருணங்கள் எனது கேரியரில் மறக்க முடியாத அனுபவங்கள். அதிலும், ஏராளமான ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று அந்த காலத்து தமிழ் பெண்ணின் வேடம் கொடுத்து என்னை லிங்கா படக்குழுவினர் பெருமைப்படுத்தி விட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
saif-sonaski-inha-main
SHARE