ராஜபக்ச குடும்பத்திற்கு பால் மாடுகளைத் தவிர வேறு சொத்துக்கள் கிடையாது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை பால் பண்ணையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நெஸ்ட்லே நிறுவனம் நேற்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
என்னைப் போன்றே எனது தந்தையும் ஒர் பால் பண்ணையாளர்.
எனக்கும் எனது குடும்பத்தாரிற்கும் தோட்டங்கள், ஹோட்டல்கள் மற்றும் கம்பனிகள் காணப்படுவதாக சிலர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
எவர் என்ன சொன்னாலும் எனக்கு சில பசு மாடுகள் மட்டுமே காணப்படுகின்றன.
நானும் எனது தந்தையும் உங்களைப் போன்றே பால் பண்ணையாளர்கள்.
எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் அந்த தோட்டம் இருக்கின்றது. ஹோட்டல் இருக்கின்றது. அந்த கம்பனி இருப்பதாக தெரிவித்தாலும் எங்களுக்கு அவ்வாறு சொத்துக்கள் இல்லை.
இலங்கையை பசும்பாலில் தன்னிறைவு அடையச் செய்யும் முயற்சிக்கு பாற்பண்ணையாளர்கள் வழங்கி வரும் ஒத்துழைப்பு அளப்பரியது என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.