ராஜஸ்தான் சங்கம் சஸ்பெண்ட்: அதிர்ச்சியில் சரத்பவார்

722
ராஜஸ்தான் சங்கத்தை காலவரையின்றி தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறித்து பிசிசிஜ மீதான தனது கோபத்தை சரத்பவார் வெளிப்படுத்தியுள்ளார்.ஐ.பி.எல். அமைப்பின் முன்னாள் தலைவர் லலித்மோடி முறைகேடு காரணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) அவருக்கு ஆயுள்கால தடை விதித்தது.

இதற்கிடையே கடந்த டிசம்பர் மாதம் நடந்த ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தேர்தலில் லலித்மோடி போட்டியிட்டார். சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் நடந்த இந்த தேர்தலின் முடிவு நேற்று வெளியிடப்பட்டது.

இதில் லலித்மோடி வெற்றி பெற்று ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். அவர் 24–5 என்ற ஒட்டு கணக்கில் அமோக வெற்றி பெற்றார்.

ஆயுள்கால தடை விதிக்கப்பட்ட லலித்மோடி ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வு பெற்றதால் கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கையை எடுத்தது. கிரிக்கெட் வாரிய விதிமுறைகளுக்கு மீறி செயல்பட்டதாக கூறி ராஜஸ்தான் சங்கத்தை காலவரையின்றி தற்காலிக நீக்கம் செய்தது.

கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக லலித்மோடியின் வக்கீலும், துணைத் தலைவராக தேர்வு பெற்றவருமான மெகமூத் ஆப்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ராஜஸ்தான் சங்கத்தை தற்காலிக நீக்கம் செய்ததற்காக கிரிக்கெட் வாரியம் மீது முன்னாள் தலைவர் சரத்பவார் , கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இது மிகவும் கடுமையான முடிவாகும். ஒரு தனி நபரை தற்காலிக நீக்கம் செய்வதற்காக ஒட்டு மொத்த சங்கத்துக்கும் தடை விதித்து இருப்பது உண்மையிலேயே அதிர்ச்சியானது.

கிரிக்கெட் வாரிய இடைக்கால தலைவரான ஷிவ்லால் யாதவ் இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்ற முடிவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

SHARE