ராதா கிருஸ்ண மாதூர் ஜனாதிபதி மறிந்தவையும் சந்தித்துள்ளார்.

434

 

இந்திய பாதுகாப்பு செயலாளர் ராதாகிருஸ்ண மாதூர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை இன்று வெள்ளிக்கிழமை காலை கண்டியில் சந்தித்து பேசியுள்ளார். இந்திய – இலங்கையிடையேயான வருடாந்த பாதுகாப்பு கருத்தமர்வில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ராதா கிருஸ்ண மாதூர் ஜனாதிபதி மறிந்தவையும் சந்தித்துள்ளார். இதேவேளை பாதுகாப்பு கருத்தமர்வில் இந்திய பாதுகாப்பு செயலாளரும், இலங்கை பாதுகாப்பு செயலாளரும் தமது பிரதிநிதிகளுடன் கலந்துகொண்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆராயப்பட்டுள்ளதுடன் புதிய ஒத்துழைப்பு முயற்சிகளும் இணங்காணப்பட்டுள்ளன என்றும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் கடல்பாதுகாப்பு குறித்தும் ஆராயப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிடமிருந்து பல விடயங்களை கற்றுக் கொள்ள விரும்புவதாக இந்திய பாதுகாப்புச் செயலாளர் ஆர்.கே.மாதுர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஆர்.கே.மாதுர் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில் இரு நாடுகளின் பல்வேறு இராணுவப் பிரிவுகளுக்கிடையிலான பயிற்சிகளை விரிவுபடுத்துவது தொடர்பாக கலந்துரையாடினர்.

இலங்கையிடமிருந்து ஏராளமான பல விடயங்களை  தாங்கள் கற்றுக்கொள்ள விரும்புவதாக மாதுர் இச்சந்திப்பில் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி அனுபவங்கள் சிறப்பான முறையில் அமைந்திருந்ததாகவும் மாதுர் கூறியுள்ளார்.

தற்போது தொடர்ந்து கொண்டிருக்கும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு மேலதிகமாக, இரு நாடுகளிலுமுள்ள பாதுகாப்புப் பயிற்சி நிறுவனங்களில் வருகை விரிவுரையாளர்களையும், நீண்டகால பயிற்சியாளர்களையும் பரிமாற்றிக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களை இலங்கையும் இந்தியாவும் ஆராயுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இந்தியாவின் ஆழ்கடல் மீன்பிடி காரணமாக இலங்கை மீனவர்கள், பிரதானமாக வடக்கு மீனவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற 2வது வருடாந்த பாதுகாப்புப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக மாதுர், இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

இச்சந்திப்பில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா, இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் ராம் சுஹக் சிங், இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் திருமதி சுசித்திரா துரை ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இலங்கை தரப்பில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி சேனுகா செனவிரத்ன, இலங்கைக் கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா ஆகியோரும் பங்கு பற்றியிருந்தனர்.

SHARE