ரிஸ்க் எடுக்க வேண்டாம் -விக்ரம் பிரபுவுக்கு ரஜினி அட்வைஸ் 

407


‘சிகரம் தொடு’ மற்றும் ‘வெள்ளக்கார துரை’ படத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு கூறியதாவது:‘கும்கி’, ‘இவன் வேற மாதிரி’, ‘அரிமா நம்பி’ ஆகிய படங்கள் வெவ்வேறு களத்தில் அமைந்தன. ‘வெள்ளக்கார துரை’யில் முதல்முறையாக காமெடி செய்துள்ளேன். அப்பா, மகனுக்கு இடையே நடக்கும் கதையாக ‘சிகரம் தொடு’ உருவாகியுள்ளது. அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார். ஆக்ஷன், காமெடி, சென்டி மெண்ட் கலந்த படம். எனக்கு போலீஸ் வேடம். கவுரவ் இயக்கியுள்ளார். விரைவில் ரிலீசாகிறது. தவிர, விஜய் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். இந்த மாதிரி படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று விதி வகுத்துக் கொள்ளவில்லை. என் தாத்தா நடிகர் திலகம் சிவாஜி மாதிரி அனைத்துவிதமான கேரக்டர்களிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். படம் இயக்க வேண்டும் என்பது லட்சியம். நடிகனாகி விட்டதால், இப்போது படம் இயக்கும் எண்ணம் இல்லை.

சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடிக்கிறேன் என்ற கவலை குடும்பத்தின ருக்கு இருக்கிறது. ‘ரொம்ப ரிஸ்க் எடுக்க வேண்டாம்’ என்று ரஜினி அட்வைஸ் செய்துள்ளார். எனக்கு டூப் போடுவதில் உடன்பாடில்லை. டூப் இல்லாமல் முரட்டு யானையுடன் நடித்ததால், ‘கும்கி’ படம் பாராட்டப்பட்டது. ‘இவன் வேற மாதிரி’, ‘அரிமா நம்பி’ படங்களின் சண்டைக் காட்சி பேசப்படுகிறது. தாத்தா மற்றும் அப்பா பிரபு பெயரை காப்பாற்றும் வகையில், அதிக கவனத்துடன் வித்தியாசமான கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பேன்

 

SHARE