வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்

538
அனைத்துலக காணாமல் போனோர் தினம் எதிர்வரும் 30 ஆம் திகதி (30-08-2014) சனிக்கிழமை சர்வதேசரீதியாக நினைவு கூறப்படுகிற நிலையில் வவுனியாவில் பிரஜைகள் குழு மற்றும் காணாமற்போன உறவுகளைத்தேடும் குடும்பங்களின் இணையம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள காணாமல் ஆக்கப்படுதலுக்கெதிரான சர்வதேச தின நிகழ்வில் அனைத்து உறவுகளும் கலந்து கொண்டு தமது உணர்வை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த அணி திரண்டு வருமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.
 இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
 அனைத்துலக காணாமல் போனோர் தினம் எதிர்வரும் 30 ஆம் திகதி (30-08-2014) சனிக்கிழமை வவுனியா நகர சபை மண்டபத்தில் காலை 9.30 மணி தொடக்கம் மாலை 2.30 மணிவரை அனுஸ்ரிக்கப்படவுள்ளது. வடக்கில் பல ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் இத் தினத்தில் அவர்களின் நிலை குறித்து சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் நாம் அமைதியான முறையில் எமது உணர்வுகளை வெளிக்கொண்டு வர வேண்டும்.
இந்த நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் தொடர்ந்தும் மௌனம் காத்து வருகின்றது.இந்த நிலையில் காணாமல் போன உறவுகளை கண்டுபிடிக்கக்கோரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்விற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒட்டு மொத்த ஆதரவை வழங்கி வரும் நிலையில் காணாமல் போன உறவுகளின் சொந்தங்கள் இந்த அமைதியான முறையில் இடம் பெறும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு எமது உறவுகளின் நிலை என்ன என்று கண்டறிய சர்வதேசத்திடம் வலியுறுத்தவுள்ளோம்.
 இந்த நிகழ்வின் இருதியில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது.எனவே அணைத்துமக்களையும் இந்த அமைதியான நிகழ்வில் கலந்து கொண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டு பிடிக்க குரல் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

SHARE