மரண அறிவித்தல்
வவுனியா புதிய கற்பகபுரம் என்னும் கிராமத்தை வசிப்பிடமாகக்கொண்ட பிறைசூடி பிரதிபூசன் என்கிற 23வயதுடைய இளைஞர், மலேசியா நாட்டிற்கு தொழிலின் நிமித்தம் சென்று, கடந்த 05வருடங்களுக்கு மேல் அங்கு பணியாற்றி வந்த நிலையில், கடந்த 25ம் திகதி அவர் அங்கு மரணமடைந்திருப்பதாக குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது உடல் இன்றையதினம் அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இம்மரணம் மர்மமான முறையில் இடம்பெற்றிருப்பதுடன், இம்மரணத்திற்கான முழுமையான காரணத்தை அறியமுடியாதுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்பதுடன், அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.