விண்வெளி மையத்தில் பிரதிபலித்த மின்னல்: வியப்பில் ஆழ்த்தும் புகைப்படம்……………..

366

சர்வதேச விண்வெளி மையத்தின் சோலார் பேனலில் பிரதிபலித்த மின்னலை விண்வெளி ஆராய்ச்சியாளர் ஒருவர் தத்ரூபமாக படம்பிடித்துள்ளர்

பூமியிலிருந்து சுமார் 400 கி,மீ தொலைவில் உள்ள செயற்கைகோளில் பயணித்த லிண்ட்க்ரென் என்பவர், பூமியில் தோன்றும் மின்னல் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள சோலார் பேனல்களில் பட்டு பிரதிபலிப்பதை மிகவும் தத்ரூபமாக படம்பிடித்துள்ளார்.

ஒரு மெல்லிய நீல கோடு அந்த புகைப்படத்தினை சுற்றி காட்சியளிக்கிறது.

தைவானை பிறப்பிடமாகக் கொண்ட லிண்ட்க்ரென், சர்வதேச விண்வெளி மையத்தின் ஆறு விண்வெளி வீரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE