விமல், கம்மன்பிலவை விட்டு விலகி செல்லும் மஹிந்த தரப்பு?

360

 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகி வேறு முன்னணி ஒன்றினை உருவாக்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
rajapakasha-family

அவ்வாறான ஒரு நிலைமை உருவாகுவதற்கு தான் உட்பட குழுவினர் இடமளிக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் தேசிய சுதந்திர முன்னணி மற்றும் பிவிதுரு ஹெல உருமய தொடர்ந்து புதிய முன்னணி தொடர்பில் கருத்து வெளியிட்டு வருகின்றது.

அத்துடன் அவ்வாறானதொரு நிலைமை ஒரு போதும் உருவாகாதென நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந் நிலைமை காரணமாக சுதந்திர கட்சியை பிளவுபடுத்தும் தேசிய சுதந்திர முன்னணி மற்றும் முன்னணியின் ஏனைய கட்சிகளுக்கு இடையில் மோதல் நிலை ஒன்று உருவாகியுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

SHARE