மேற்கு இந்தியத் தீவுகளின் அதிரடி ஆட்டக்காரரான கிரிஸ் கெயில் வீட்டினுள் அறை நிர்வாண கிளப் வைத்துள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.மேற்கு இந்தியத் தீவுகளை சேர்ந்த துடுப்பாட்டக்காரரான கிரிஸ் கெயில் அவரது அதிரடி ஆட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் அறியப்படுகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார். அதில் அறைகுறை ஆடைகளுடன் பெண்கள் நடனமாடும் ஸ்ட்ரிப் கம்பி மற்றும் மேடை உள்ளது. இதன் அருகே கிரிஸ் கெயில் மேலாடையின்றி இருக்கிறார். சிறிது தூரத்தில் பெண் ஒருவர் அறைகுறை ஆடையுடன் உள்ளார். மேலும் வீட்டில் நீச்சல் குளத்தில் இருந்து ஸ்டிரிப் கிளப் வரை இருக்க வேண்டும். வீட்டில் ஸ்டிரிப் கிளப் இல்லாவிட்டால், அவர்கள் கிரிக்கெட் வீரர்களே கிடையாது. எனது வீட்டிற்கு வருபவர்களின் பொழுது போக்கிற்காக இந்த கிளாப் வைத்துள்ளேன் என்று அந்த அவர் விளக்கம் அளித்துள்ளார். |