- அங்காடி தெரு மகேஷ் நாயகனாக நடிக்கும் படம் “நாகர்கோவில் சந்திப்பு”.
இதில் அவருக்கு ஜோடியாக ஜோதிகிருஷ்ணா நடிக்கிறார். மற்றும் சுகன்யா, ஷங்கிரின், ஆகியோர் நடிக்கிறார்கள். மலர்விழி புரெடக்சன்ஸ் பட நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய இசையமைக்கிறார் ராஜ்பாஸ்கர். எழுதி இயக்குபவர் ஜி.ஜீ.அசோகன்.
படம் பற்றி இயக்குனர்…
பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் படிக்காமல் எதிர்கால சிந்தனை இல்லாமல் இருகிறார்கள்… அவர்களை பார்த்து பரிதாபப் பட்ட ஆசிரியை சுகன்யா அவர்களை திருத்த அறிவுரை சொல்கிறார்.
அது பிடிக்காத மாணவர்கள் சுகன்யாவை மாடியிலிருந்து தள்ளி விடுகிறார்கள். அந்த குற்றத்திலிருந்து தப்பித்தார்களா? மாணவர்கள் வெற்றி பெற்றார்களா என்பதுதான் கதை!
படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை நாகர்கோவிலில் நடத்தியிருக்கிறார்கள்.