அசத்திய கொல்கத்தா: வாழ்த்து சொன்ன மம்தா

575
ஐ.பி.எல் சாம்பியனான கொல்கத்தா அணிக்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.நேற்று நடந்த ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் பஞ்சாப்- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் அசத்தலாக விளையாடிய கொல்கத்தா, பஞ்சாப் அணியை வீழ்த்தி 2வது முறையாக ஐ.பி.எல் சாம்பியன் பட்டம் வென்றது.இதற்கு வாழ்த்து தெரிவித்திருந்த மம்தா பானர்ஜி தனது வலைத்தளத்தில், ‘வாழ்த்துக்கள்..கே.கே.ஆர்..,வாழ்த்துக்கள்..சாரூக்..’ என்று எழுதியுள்ளார்.

மேலும், பெங்கால் விக்கெட் கீப்பரும், துடுப்பாட்டக்காரருமான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியைச் சேர்ந்த சாஹா சதமடித்ததற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

SHARE