\Li-Fi எனப்படுவது ஒளியினை அடிப்படையாகக் கொண்டு இணைய இணைப்பினை உருவாக்குவதாகும்.
மின்குமிழ்களின் ஊடாகவும் தரவுகளை பரிமாற்றம் செய்யக்கூடிய இத் தொழில்நுட்பமானது பன்மடங்கு வேகத்தினைக் கொண்டதாக இருக்கின்றது.
தற்போது வரைக்கும் பரிசோதனை முயற்சியில் இருக்கும் இத் தொழில்நுட்பத்தில் மற்றுமொரு புரட்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதாவது புதிய வகை Li-Fi முறை ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த முறையின் ஊடாக 40 Gbps வேகத்தில் தரவுப்பரிமாற்றம் மேற்கொள்ளக்கூடியதாக இருப்பதுடன், தற்போதுள்ள Wi-Fi தொழில்நுட்பத்தினை விடவும் 100 மடங்கு வேகம் கூடியதாகவும் காணப்படுகின்றது.
முன்னைய Li-Fi தொழில்நுட்பத்தில் LED மின்விளக்குகளே பயன்படுத்தப்பட்டிருந்தன.
இதில் வரையறைகள் காணப்பட்டன. ஆனால் தற்போது செங்கீழ் கதிர்களை (Infrared) பயன்படுத்தி புதிய Li-Fi உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் ஊடாகவே 40 Gbps வேகத்தில் தரவுப்பரிமாற்றம் செய்யக்கூடியதாக இருக்கின்றது.