பாலிவுட் நடிகை ஐஸ்வர்யாராய், உலக முழுவதும் பிரபலமான நபர். முன்னாள் உலக அழகியான இவர் இந்தி படங்கள் மட்டுமில்லாமல் சில ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
இந்தி நடிகர் அமிதாப்பச்சனின் மகன் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து சினிமாவிற்கு சிறிது இடைவெளிவிட்டவர், மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார்.
இந்நிலையில் அச்சு அசலாக ஐஸ்வர்யா ராய்யை போலவே இருக்கும் பெண்ணின் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாக சுற்றி வருகிறது. ஐஸ்வர்யாராய்யை போலவே இருக்கும் இந்த பெண்ணின் பெயர் மெக்லஹா ஜபேரி, ஈரான் நாட்டில் மாடல் அழகியாக உள்ளார்.