அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் பெண்.. அதுவும் திருமண கோலத்தில், புகைப்படத்துடன் இதோ

82

 

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகை எனும் அந்தஸ்தில் இருக்கும் சமந்தா, தென்னிந்திய சினிமாவையும் தாண்டி தற்போது பாலிவுட் வரை சென்றுவிட்டார். ஹாலிவுட் படங்கள் வாய்ப்பு கூட இவரை தேடி வந்ததாக சொல்லப்படுகிறது.

சமந்தா தற்போது மயோசிடிஸ் நோயின் காரணமாக முன்பு போல் தொடர்ந்து படங்கள் நடிக்காமல் இருந்து வருகிறாராம். இவர் கைவசம் ஒரே ஒரு வெப் தொடர் மட்டுமே உள்ளது. ஆங்கிலத்தில் உருவான சிட்டாடல் எனும் வெப் தொடரின் இந்திய பதிப்பில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக வருண் தவான் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விவாகரத்துக்கு பின் சமந்தாவின் இரண்டாம் திருமணம் குறித்து பல செய்திகள் வெளிவந்தன. சமீபத்தில் கூட, சமந்தாவிற்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க அவருடைய திருமணம் முடிவு செய்துள்ளதாகவும், மாப்பிள்ளையையும் கூட தேர்வு செய்துவிட்டதாகவும் தகவல் வெளிவந்தது. ஆனால், இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை.

சமந்தா போலவே இருக்கும் பெண்
உலகில் ஒருவரை போல் 7 பேர் இருப்பார்கள் என சொல்லி கேள்விப்பட்டு இருப்போம். இந்த நிலையில், நடிகை சமந்தாவை போலவே இருக்கும் பெண் ஒருவர், சமந்தா தனது திருமணத்தில் எப்படி இருந்தாரோ, அதே போன்ற புடவை, மேக்கப் மற்றும் அணிகலன்களை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

SHARE