அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் பிரபல நடிகர்

248

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக அதிக கொடுமைகள் நடந்து வருகிறது, அந்த நிகழ்வுகளை பார்த்து வருகிறோம்.

இதற்கான தீர்வு என்ன என்பது இப்போது வரை தெரியவில்லை. தற்போது பெண்கள் சமூதாயத்தில் படும் கொடுமையை வெளிப்படையாக பேசும் ஒரு படமாக தயாராகி வருகிறது அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை.

படம் குறித்து செய்தி வரவில்லை என்றாலும் படத்தில் நடித்த நடிகர் ஒருவர் பேட்டி கொடுத்துள்ளார். அவர் யார் என்றால் கேகே மேனன் தான். அவர் ஒரு பேட்டியில், நான் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் HR மேனேஜராக நடித்துள்ளேன், நல்ல அழுத்தமான வேடம்.

ஆனால் படத்தில் எனக்கு அஜித்துடன் நடிக்கும் காட்சிகள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.

SHARE