அஜித்துடன் அந்த ஒன்று மிஸ் ஆனது, காரணம் தெரியவில்லை- சதீஷ் ஓபன் டாக்

85

 

சினிமா அது எனது வேலை, அதேசமயம் இதில் மட்டுமே இருந்து விடாமல் எனது கனவை நோக்கியும் பயணம் செய்வேன் என எப்போதும் பிஸியாகவே இருப்பவர் அஜித்.

இப்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித் அதேசமயம் பைக் டூர் செல்வதிலும் அதிக கவனம் செலுத்து வருகிறார்.

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வந்தது. அங்கு எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படங்களை புக்பாஸ் புகழ் ஆரவ் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட வண்ணம் இருந்தார்.

இப்போது அங்கு படப்பிடிப்பு முடிந்து படக்குழு சென்னை திரும்பிவிட்டார்கள்.

அஜித் பற்றி சதீஷ்
நடிகர் சதீஷ் நடித்த Conjuring Kannappan படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் அடுத்து வித்தைக்காரன் படம் வெளியாக இருக்கிறது. படம் குறித்து பத்திரிக்கையாளர்களையும் சதீஷ் சந்தித்துள்ளார்.

ஒரு பேட்டியில் சதீஷிடம், அஜித்துடன் நடிக்கவில்லையே என கேட்டதற்கு, எனக்கு மட்டும் ஆசை இல்லை என்ன, கண்டிப்பாக அவருடன் நடிக்க வேண்டும் என்று விருப்பம் உள்ளது.

அப்படி ஒரு படம் அமைந்தது, அதில் நடித்தது எனது நண்பன் தான். அதன்பிறகு எனக்கு வாய்ப்புகள் எதுவுமே வரவில்லை என கூறியுள்ளார்.

SHARE