அஜித் மகளை வீடியோ எடுத்த நபர்.. கோபத்திற்கு பின் இருக்கும் காரணம் இதுதான்

98

 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கி வரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அசர்பைஜானில் நடைபெற்று வரும் நிலையில், பிப்ரவரி இறுதி வரை படப்பிடிப்பு நடக்கும் என கூறப்படுகிறது. மே 1 அஜித் பிறந்தநாள் அன்று விடாமுயற்சி திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம் இப்படம் தீபாவளிக்கு வருவதற்கு தான் அதிக வாய்ப்புகள் என்று கூறுகின்றனர். எது நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

அஜித் சர்ச்சை வீடியோ
கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் அஜித், ரசிகர் ஒருவரின் மொபைல் போனை வாங்கி அதிலிருந்து தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டெலிட் செய்வது போல் வீடியோ ஒன்று வைரலானது. ரசிகர் எடுத்த வீடியோவை கூட டெலிட் செய்யவேண்டுமா என பலரும் அஜித் மீது கேள்வி எழுப்பினார்கள்.

உண்மை இதுதான்
ஆனால், அது உண்மையில்லையாம். அஜித்தின் மகள் அனோஷ்காவை தான் அந்த நபர் வீடியோ எடுத்துள்ளாராம். இதை அறிந்தபின் ஒரு தந்தையாக கோபத்துடன் சென்று அந்த நபரின் மொபைல் போனை வாங்கி அதிலிருந்து வீடியோவை அஜித் டெலிட் செய்துள்ளார் என மூத்த பத்திரிகையாளர் வி.கே. சுந்தர் கூறியுள்ளார்.

SHARE