அஜித் நடித்து வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் என்னை அறிந்தால். கௌதம் மேனன் இயக்கியுள்ள இந்த படத்தில் திரிஷா, அனுஷ்கா நாயகிகளாக நடித்துள்ளனர். இதுவரை நாயகனாக நடித்துவந்த அருண் விஜய் இப்படத்தில் வில்லனாக நடித்தார். இவரது நடிப்பிற்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன. அவரை பாராட்டியதில் அஜித் மகள் அனோஷ்காவும் ஒருவர். அவரது பாராட்டை நினைத்து நெகிழ்ந்து போனாராம் அருண் விஜய். அனோஷ்கா எழுதிய கடிதத்தில், முதன் முறையாக வில்லன் வேடம் ஏற்று நடித்ததற்கு பாராட்டுக்கள். சண்டைக் காட்சிகளில் உங்கள் நடிப்பு சூப்பர். என் அப்பாவுடன் நடிதத்தற்கு நன்றி என்று எழுதியிருந்தாராம்.