அடிப்படைவாதிகளால் இலங்கை முஸ்லிம்களுக்கு ஆபத்து! ரவூப் ஹக்கீம்-சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில்

459

இலங்கையில் சிறுபான்மை இனங்களின் எதிர்காலம் கடும் அபாயத்துக்குள்ளாகியிருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள அடிப்படைவாத அமைப்புகளின் செயற்பாடுகள் காரணமாக முஸ்லிம்களுக்கு ஆபத்தான நிலை தோன்றியுள்ளது.

அடிப்படைவாத சக்திகளின் செயற்பாடுகள் தற்போது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக முஸ்லிம்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த சிறுபான்மை இனங்களும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்னர்.

விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றிக்குப் பின்னர் முஸ்லிம்கள் மீது கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றது. இதனை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளமுடியாது.

தமிழர்களின் நிலையிலும் எதுவித முன்னேற்றங்களும் இல்லை. இவ்வாறான நிலையில் சிறுபான்மை இனங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கியுள்ள சந்தர்ப்பத்தில் இலங்கையின் முக்கிய முஸ்லிம் அமைச்சரான ரவூப் ஹக்கீம் அண்மையில் சவூதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன் காரணமாக அவரிடம் நேர்காணல்களைப் பெற அங்குள்ள ஊடகங்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியதாக அறிய முடிகின்றது.

அதன் போது வழங்கிய பேட்டியொன்றில் பௌத்த அடிப்படைவாதத்தை அரசாங்கம் கட்டுப்படுத்தாது போனால் பிராந்திய நெருக்கடி ஏற்படும் என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் எச்சரித்திருந்தார்.

 

SHARE