சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சியான சன் டிவி பல வருடங்களாக டிஆர்பியில் டாப்பில் இருந்து வருகிறது.
டாப்பில் இருக்கும் அவர்களுடன் மோத வேண்டும் என்றால் மற்ற தொலைக்காட்சிகள் நிறைய முயற்சி செய்த வேண்டும்.
விஜய் டிவி சீரியல்கள் அவ்வப்போது டாப் 5ல் வந்தாலும் முதல் இடத்திற்கு மட்டும் அவ்வளவு எளிதாக அவர்களால் வர முடியவில்லை.
தற்போது சன் டிவியில் டிஆர்பியில் குறைந்து வரும் சீரியல்களை முடித்து வருகிறார்கள், புதியதாக நிறைய தொடர்களை களமிறக்க உள்ளார்கள்.
புதிய தொடர்கள்
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர்கள் குறித்தும், நடிகர்களின் விவரம் பற்றியும் வெளியாகியுள்ளது.
தோழி என்ற புதிய தொடர் வரப்போகிறது, அதில் சந்தோஷ் மற்றும் ஜீவி இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
மற்றொரு தொடருக்கு புன்னகை பூவே என பெயர் வைத்துள்ளனர், அதில் சைத்ரா சக்கரி மற்றும் ஹர்ஷ் நாக்பால் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்களாம்.