அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகும் LeEco Cool 1 Dual

292

சம காலத்தில் அதிகரித்து வரும் ஸ்மார்ட் கைப்பேசிப் பாவனையின் காரணமாக அவற்றினை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந் நிறுவனங்களின் வரிசையில் LeEco எனும் நிறுவனமும் இணைந்துள்ளது.

இந் நிறுவனமாது Cool 1 Dual எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை அந் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன்படி குறித்த கைப்பேசியானது Qualcomm Snapdragon 652 Processor, பிரதான நினைவகமாக 3GB அல்லது 4GB RAM என்பவற்றினைக் கொண்டுள்ளதுடன், 32GB மற்றும் 64GB சேமிப்பு நினைவகங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் நீண்ட நேரம் மின்சக்தியை வழங்கக்கூடிய 4060 mAh மின்கலமும் தரப்பட்டுள்ளது. இதன் விலையானது 166 டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE