அட்டகாசமான வசதியுடன் கூகுள் போட்டோசின் புதிய பதிப்பு

239

625-500-560-350-160-300-053-800-748-160-70-3

புகைப்படங்களை நண்பர்களுடனும் குடும்பத்தவர்களுடனும் பகிர்ந்து மகிழக்கூடிய சேவையை Google Photos அப்பிளிக்கேஷன் ஊடாக கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.

தற்போது குறித்த அப்பிளிகேஷனின் புதிய பதிப்பு ஒன்றினை மொபைல் சாதனங்களுக்காக அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதில் சில புதிய அம்சங்கள் தரப்பட்டுள்ள நிலையில் புகைப்படங்களை விரைவாக பகிர்ந்துகொள்ளக்கூடியதாக தரப்பட்டுள்ள வசதி முக்கிய அம்சமாகக் காணப்படுகின்றது.

இதனை கீழே தரப்பட்டுள்ள வீடியோவின் ஊடாக தெரிந்துகொள்ள முடியும். மேலும் புகைப்படங்களை கைப்பேசி இலக்கங்களை பயன்படுத்தியும் பகிரக்கூடிய வசதி காணப்படுகின்றது.

இவ்வாறு பகிரப்படும்போது குறித்த கைப்பேசி இலக்கங்களுக்கு குறுஞ்செய்தியின் ஊடாக புகைப்படங்கள் அல்லது வீடியோக்களின் இணைய இணைப்பு அனுப்பப்படும். இந்த இணைப்பில் கிளிக் செய்வதன் மூலம் அவற்றினைப் பார்வையிட்டு மகிழ முடியும்.

இப்புதிய பதிப்பானது தற்போது அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தக் கூடிய வகையில் கிடைக்கின்றது.

SHARE