அட நடிகர் விஜய் சேதுபதி மகளா இவர், ஆளே மாறிவிட்டாரே?- லேட்டஸ்ட் க்ளிக், செம வைரல்

80

 

தமிழ் சினிமா இப்போது முன்பு இருந்தது போல் இல்லை, இதை செய்தால் படம் ஓடுவிடும், குத்து பாடல் வைத்தால் டாப்பில் வந்துவிடலாம் என நிறைய கணக்கு இருந்தது.

ஆனால் இப்போதெல்லாம் பாடல்கள் இல்லாமலும், முன்னணி நடிகர்கள் இல்லாமலும் படத்தை வெற்றிபெற வைக்கிறார்கள் ரசிகர்கள்.

அதேபோல் நடிகர்கள் இன்னொரு முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க கூடாது அப்படி நடித்தால் அதிலும் வில்லனாக எல்லாம் நடித்தால் மார்க்கெட் இருக்காது என்று பயந்தவர்களும் உள்ளார்கள்.

அவர்களின் பயத்தை எல்லாம் காலி செய்யும் வகையில் ஹீரோவாக இருந்தும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து புதிய பாதையை உருவாக்கியவர் நடிகர் விஜய் சேதுபதி.

தற்போது மகாராஜா, விடுதலை 2 படங்களில் நடிக்கிறார், மிஷ்கின் இயக்கத்தில் டிரெயின் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

குடும்ப போட்டோ
ஜெஸ்ஸி என்பவரை திருமணம் செய்துகொண்ட விஜய் சேதுபதிக்கு சூர்யா என்ற மகனும் ஸ்ரீஜா என்ற மகளும் உள்ளனர். தற்போது சூர்யா சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார், அடுத்து அவரது மகள் நடிக்க வருவாரா என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் தான் விஜய் சேதுபதி தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் அவரது மகள் ஸ்ரீஜா ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார், இதோ லேட்டஸ்ட் க்ளிக்,

SHARE