சினிமா ரசிகர்கள் 80ஸ், 90ஸ் நாயகிகள் என தனித்தனியாக கொண்டாடியுள்ளார்கள்.
பலர் இப்போது சினிமா பக்கமே காணவில்லை, ஆனால் சில நடிகைகள் இப்போதும் சினிமாவில் படங்கள் நடித்து வருகிறார்கள்.
ஒருகாலத்தில் முன்னணி நடிகையாக டாப் நடிகர்களுடன் நடித்து தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும படங்கள் நடித்து அசத்தியவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
இவர் தன்னுடைய 14 வயதில் சினிமாவில் அறிமுகமாக முதல் படமே இவருக்கு தோல்வி படமாக அமைந்துள்ளது, பின் அவர் வசந்தம் படத்தில் நடிக்க நல்ல வரவேற்பு பெற்றார்.
தொடர்ந்து படங்கள் நடித்து வந்தாலும் இவருக்கு படையப்பா படம் தான் பெரிய ரீச் கொடுத்தது, அதன்பின் பாகுபலி படத்தில் அவர் நடித்த சிவகாமி கதாபாத்திரமும் பெரிய பெயர் வாங்கி கொடுத்தது.
திருமணம்
நல்ல கதாபாத்திரம் உள்ள படங்களில் நடிப்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருப்பது என இப்போதும் ஆக்டீவாக உள்ளார்.
இவருக்கு 2003ம் ஆண்டு கிருஷ்ண வம்சி என்பவருடன் திருமணம் நடந்தது, இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் திருமண புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதைக்கண்ட ரசிகர்கள் அட ரம்யா கிருஷ்ணனா இது, திருமணத்தின் போது ஆளே அடையாளம் தெரியலையே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.