அட பிக்பாஸ் 7 புகழ் விசித்ராவா இது, அவரே வெளியிட்ட கியூட் போட்டோ- யாருடன் எடுத்துள்ளார் பாருங்க

73

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

கடந்த வருடம் அக்டோபர் 1ம் தேதி படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி கடந்த மாதம் முடிவடைந்தது.

இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார். அர்ச்சனாவை தாண்டி இந்த நிகழ்ச்சி மூலம் விசித்ரா, பிரதீப், மணி போன்றவர்களுக்கு நல்ல பெயரும் கிடைத்தது.

விசித்ரா போட்டோ
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு சென்ற விசித்ராவிற்கு குடும்பத்தினர் அமோகமான வரவேற்பு கொடுத்தார்கள். அந்த வீடியோவை கூட அவரே தனது இன்ஸ்டாவில் வெளியிட மக்களும் லைக்ஸ் குவித்து வந்தனர்.

இந்த நிலையில் நடிகை விசித்ரா தனது மகன்கள் மற்றும் கணவருடன் குடும்பமாக எடுத்த அழகிய போட்டோவை வெளியிட்டுள்ளார். அவர் இன்று வெளியிட்ட இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

SHARE