அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதற்கான அபாயம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தற்போது உச்ச நிலையை அடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான உயர்மட்ட பாதுகாப்பு நிபுணர் நேற்று முன்தினம் எச்சரித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதக் களைவு ஆராய்ச்சிக்கான நிறுவகத்தின் பணிப்பாளரான ரெனட்டா டவன் சுவிட்ஸர்லாந்தில் ஜெனிவா நகரில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் இவ்வாறு எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையிலான தந்திரோபாய போட்டி காரணமாக ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அணு ஆயுதங்களைக் கொண்ட அனைத்து நாடுகளும் அணுசக்தி நவீனமயமாக்கல் நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அவர் கூறினார். ஆயுதக் குழுக்கள், தனியார் துறைப் படைகள் மற்றும் பாதுகாப்புக்கும் மோதலுக்குமான புதிய தொழில்நுட்பங்கள் காரணமாக புதிய வகை போர் தொடர்பான அவசரகால நிலைமை தோன்றியுள்ளதால் பாரம்பரிய ஆயுதக் கட்டுப்பாட்டு ஏற்பாடுகள் இல்லாதொழிக்கப்பட்டு வருவதாக ரெனட்டா டவன் கூறினார்.
அணு ஆயுதங்களால் ஏற்படக் கூடிய அபாயத்தை நாம் அலட்சியம் செய்ய முடியாது எனத் தெரிவித்த அவர்,
இந்த அபாயம் தொடர்பில் எவ்வாறு செயற்பட்டு அதனை எவ்விதத்தில் முகாமை செய் வது என்பது தற் போது எழுந்துள்ள முக்கிய கேள்வியாகவுள்ளதாக கூறினார்.