கோபம் இருக்கின்ற இடத்தில் தான் குணம் இருக்கும் என்பார்கள். ஆனால், அதோடு சேர்ந்து சில உடல்நலக் குறைவுகளும் இருக்கும் என்பதை ஏனோ யாரும் எந்த ஏட்டிலும் எழுதி வைக்கவில்லை. புகையும், மதுவும் உடல்நலத்திற்கு கேடு என்றால். கோபம் உடல்நலத்திற்கும், மன நலத்திற்கும், நல்ல உறவுகளுக்கும் கூடக் கேடு விளைவிக்கும்.
கோவம், உங்களது பெயரை மட்டுமில்லாது உடலையும் சேர்த்துக் கெடுத்து உங்கள் மனதை அரிக்கும் நோயாக மாறக் கூடியது. இனி, உங்கள் கோபத்தினால் உங்கள் உடல்நிலையில் என்னென்ன மாற்றங்கள் மற்றும் பாதிப்புகள் ஏற்படும் என்று பார்க்கலாம்…
இதயம்
அதிகம் கோபப்படுவதனால் உடல்நலத்திற்கு ஏற்படும் முக்கிய பாதிப்பாகக் கருதப்படுவது இதயம் சார்ந்தப் பிரச்சனைகள் தான். இது இரத்த குழாய் சார்ந்த பிரச்சனைகளை அதிகப்படுத்துகிறது.
பக்கவாதம்
இதயப் பிரச்சனைகளுக்கு அடுத்துக் கோபப்படுவதனால் அதிகமாக ஏற்படும் பிரச்சனையாகக் கருதபடுவது பக்காவாதம் ஆகும். அதிகமாக கோபப்படுவதால் இரத்த உராய்வுகள் / கட்டிகள் / அடைப்பு ஏற்பட மூன்று மடங்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறதாம்.
நோய் எதிர்ப்பு சக்தி
நீங்கள் அதிகமாக கோபப்பட்டுக் கொண்டே இருந்தால், உங்களது நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் வெகுவாக பாதிக்கப்படும்.
மன அழுத்தம், பதட்டம்
தொட்டதற்கெல்லாம் கோபப்படுபவர்களுக்கு பதட்டமும், மன அழுத்தமும் அதிகரிக்கிறதாம். மன அழுத்தம் அதிகரிப்பது தான் பல உடல்நலக் கோளாறுகளுக்குக் காரணமாகும்.
நுரையீரல்
புகையை விட அதிகமாக, கோபப்படுவதனால் தான் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றதாம்.
வாழ்நாள் குறைவு
மேற்கூறிய அனைத்தும் சேர்ந்து ஒட்டுமொத்தமாய் உங்கள் வாழ்நாளை குறைக்கின்றது.