அதிகாரத் துஷ்பிரயோகங்கள் எவ்வளவு தவறோ…….. அதே போல ஆளுமையுடன் அதிகாரங்களைச் சரியான முறையில் பயன்படுத்தாமல் இருப்பதுவும் மிகத் தவறு

30

 

பொறுப்பு வாய்ந்தபொறுப்புக் கூறலிலுள்ளஅதிகாரமிக்க உயர் பதவிகள் வகிக்கும்
ஆளுநர், அமைச்சர், அரசாங்க அதிபர்இம்மூவரிடமும் மக்கள் சார்பாக
சில கேள்விகள்….?
முடிந்தவரை பகிர்ந்து
இவ்வளவு காலமும் இப்படியான கூட்டங்கள் நடைபெறுவதும் மக்களுக்குத் தெரியாது.
அங்கே என்ன நடக்கிறது
என்ன முடிவுகள் எடுக்கப்படுகிறது என்றும் தெரியாது.
கூட்டம் நடந்ததாக பத்திரிகைகளில் ஒரு செய்தி வரும் அவ்வளவு தான்.
வடக்கில் இன்று பல விடயங்கள் வெளிச்சத்துக்கு வருகிறது
மக்களின் கவனத்திற்கு வருகிறது என்றால் அதற்கு காரணம்
நீங்கள் எவரும் விரும்பினாலோ விரும்பா விட்டாலோ
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்
வைத்தியர் இராமநாதன் அருச்சுனாவே தான்.
சரி விடயத்திற்கு வருவோம்…!
அதிகாரத் துஷ்பிரயோகங்கள் எவ்வளவு தவறோ……..
அதே போல ஆளுமையுடன் அதிகாரங்களைச் சரியான முறையில் பயன்படுத்தாமல் இருப்பதுவும் மிகத் தவறு.
இதனால் தான் அதிகாரத் துஷ்பிரயோகங்கள், ஊழல்கள் தொடர்கின்றன.
நேற்றைய மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டத்தில் அரச அதிகாரிகள் நடந்து கொண்ட முறையானது மிகவும் வெட்கப்பட வேண்டிய ஒன்று.
அங்கே வந்திருந்தவர்கள் எவரும் சிறுவர்களல்ல. மெத்தப் படித்த
பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகிக்கும் அரச அதிகாரிகள்..!
நடந்தது ஒன்றும் நகைச்சுவைப் பட்டிமன்றமும் அல்ல.
அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டம்.
அதில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்
தனது கேள்விகளை முன்வைத்து
விளக்கங்களைக் கேட்கும் போது
பொறுப்பிலுள்ள அதிகாரிகள் அதற்கான பதிலைக் கூறுவது தானே கடமை.
அதைவிடுத்து அங்கே சிரிப்பிற்கோ நகைப்பிற்கோ இடமில்லையே.
அங்கேயென்ன ரவுடிகள் கூட்டமா நடந்தது..?
ஆளாளுக்கு இவனை வெளியேற்று என்று சொல்வதற்கு.
இத்தனைக்கும் ஒரு கௌரவ.பாராளுமன்ற உறுப்பினரை.
அவர் கேட்ட கேள்விகளில்
தவறாக என்ன இருந்தது…?
கேட்கப்பட்ட கேள்விகள் யாவும்
மக்கள் சார்பான அபிவிருத்திப்பணிகள் தொடர்பாக, அரசினால் வழங்கப்பட்ட பணம் ஏன் சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்று தானே…?
அருச்சுனா கேள்விகள் கேட்பதால் தான்
பல விடயங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன.
மக்களுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுகிறது.
ஆனால்………
பாடசாலையில் வகுப்பறைகளில் கூட இவ்வாறான நகைப்புகள், கேள்வி கேட்பவர்களைத் தடுக்கும் சம்பவங்கள் நடப்பதற்கு ஆசிரியர்கள், அதிபர்கள் கூட அனுமதிக்க மாட்டார்கள்.
எனில் இவையும் அதிகாரத் துஷ்பிரயோகங்களே.
உங்கள் அதிகாரங்களைப் பயன்படுத்தி இவற்றை உடனடியாகத் தடுக்காமல்
நேரங்களை வீணடித்து
ஒரு முக்கிய கூட்டத்தில் அமைதியின்மைக்கு இடம் கொடுத்தமையும் உங்கள் மூவரினதும் தவறுகளே.
இங்கேயும் கேள்விகள் கேட்கக்கூடாது எனில்
எதற்காக இந்தக் கூட்டம்…?
அரச பணத்தை எதற்காக இப்படியெல்லாம்
இனியும் வீணடிக்க வேண்டும்.
அவரவர் தரும் அறிக்கைகளை எந்தக் கேள்வியும் கேட்காமல் பெற்றுக்கொள்ள
வேண்டியது தானே…?
கேள்வி கேட்டால் அதற்குரிய பதிலைக் கொடுக்காமல்……… அறிக்கை வாசிப்பதுவும்
என்ன மாதிரியான செயல்கள்…?
ஒரு படித்த பொறுப்பு வாய்ந்தவர்கள் செய்யும் வேலைகளா இவை…?
மக்களும் கேள்விகள் கேட்கக்கூடாது.
பாராளுமன்ற உறுப்பினரும் கேள்விகள் கேட்கக்கூடாது எனில்………
என்ன மாதிரியான அரச நிர்வாகங்கள் இவை..?
இங்கே அருச்சுனா சபையைக் குழப்பவுமில்லை. சபை நாகரீகமில்லாமல் நடந்து கொள்ளவுமில்லை.
கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத குற்ற உணர்வுள்ளவர்களே
அருச்சுனாவைக் கேலியாக்கி தங்கள் தவறுகள் வெளிவராமல் இருக்க முனைகிறார்கள்.
அருச்சுனா யாரின் கல்வித் தகுதிகள் பற்றியும் அங்கே கேள்விகள் எழுப்பவில்லை.
தனது தகுதிகள் பற்றிச் சொல்லி, விரும்பினால் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து தருகிறேன் என்று தான் கூறினார்.
அதற்கு இன்னொரு பெண் அதிகாரி தானும் அதே படிப்பு படித்துள்ளேன் என்று சொன்ன போது தான்
விளக்கத்திற்காகவும்
இதுவரை செலவழித்த பணம் தொடர்பாகவும் சில கேள்விகள் கேட்கப்பட்டன.
கேட்கப்பட்ட தொனி பிழையாக இருக்கலாம்.
ஆனால் கேட்கப்பட கேள்விகளில் தவறில்லை.
இவ்வாறான நகைப்புக்குரிய விடயங்கள்
இனிவரும் காலங்களில் முற்றாகத் தடுக்கப்பட வேண்டும். அரச பதவிகளிலுள்ளவர்கள் பொறுப்புணர்வுடன் முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்.
மக்கள் எல்லா விடயங்களையும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு தான் உள்ளனர்.
மக்களுக்கான பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இருந்து கொண்டு நீங்கள் செய்யும் கேலிக்கூத்துகளை வேடிக்கை பார்க்க
மக்கள் இனியும் தயாரில்லை.
எவ்வாறு இவ்வாறான சம்பவங்கள் நடை பெற அமைச்சரும், ஆளுநரும், அரசாங்க அதிபரும் அனுமதித்தார்கள் என்று தான் விளங்கவில்லை….?
அடுத்த கூட்டத்திலாவது ஒரு படித்த சமூகமாக நடந்து கொள்ளுமாறும்
உங்கள் ஆளுமைகள், அதிகாரங்களைச் சரியாகப் பயன்படுத்துவீர்கள் என்றும் நம்புகிறோம்..!
நன்றி
அன்புடன்
* சர்மினி-சிறிகாந்தன் *
SHARE