ஈரான் மீது இஸ்ரேல் இன்றையதினம் ஏவுகணைகளை வீசி பதில் தாக்குதல் நடத்தியிருப்பதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியானது.
ஈரானின் இஸ்பஹான் நகரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து சத்தம் கேட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தாக்குதல் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், வான் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.
மேலும், எதிரிகளின் ஆயுதங்கள் மற்றும் விமானங்களை கண்டறிந்து பதில் ஏவுகணைகளை வீசி அழிக்கும் வான் பாதுகாப்பு சாதனங்களை ஈரான் பயன்படுத்த தொடங்கியுள்ளது.
இன்றையதினம் அதிகாலையில் ஆளில்லா விமானங்கள் பறந்தததாக வெளியான செய்திகளால் பல மாகாணங்களில் வான் பாதுகாப்பு சாதனங்கள் இயக்கப்பட்டதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.