அதிகூடிய சேமிப்பு வசதியுடன் Asus ZenFone 2 Deluxe அறிமுகம்

384
Asus நிறுவனமானது ZenFone 2 ஸ்மார்ட் கைப்பேசியின் மற்றுமொரு பதிப்பினை பிரேஸிலில் அறிமுகம் செய்யவுள்ளது.இக் கைப்பேசியில் 256GB வரையான சேமிப்பு வசதி தரப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.மேலும் 5.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution கொண்ட Full HD தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது Eight Core Intel Atom Z3580 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 3000 mAh மின்கலம், இரட்டை சிம் வசதி என்பனவும் தரப்பட்டுள்ளன.

SHARE