அதிக மாசு ஆக்கிரமித்த நகரமாக டில்லி

577

உலகிலுள்ள தலை நகரங்களில் மிக மோசமாகவும், அதிக மாசு ஆக்கிரமித்த நகரமாகவும் டில்லி காணப்படுபதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகில் மாசு அதிகம் கொண்ட தலைநகர், நகரம் தொடர்பாக ஆய்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவு நேற்று இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தாவில் வெளியிட்டுள்ளது.

உலகிலுள்ள தலை நகரங்களில் மிக மோசமாகவும், அதிகமாகவும் மாசு ஆக்கிரமித்த நகரமாக டில்லி தெரிவாகியுள்ளது. டில்லியின் புறநகரங்களில் குருகிராம், நொய்டா, காசியாபாத், பரிதாபாத் ஆகிய நகரங்களும் அதிகம் மாசு கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் உலகிலேயே டில்லி மண்டலம் மிக மிக மாசு படிந்ததாக உலக சுகாதார நிறுவனத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்களில் உருவாகும் மாசு பற்றி ஆய்வு செய்யப்பட்டதில் இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகில் அதிக மாசு கொண்ட முதல் 10 நகரங்களில் 7 நகரங்கள் இந்தியாவில் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. தென்னிந்திய நகரங்களை விட, வட இந்திய நகரங்கள்தான் அதிக மாசு அபாயம் கொண்டதாக உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்திய நகரங்களில் மாசு அபாயம் அதிகரித்துள்ளது.

SHARE