ஜெய்பூரில் உள்ள ஒரு குடும்பத்தில் 31 பேர் மருத்துவர்களாக உள்ள அதிசயம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. |
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில், வீனமிரிதா பாட்னி என்பவர் குடும்பத்தில் மொத்தம் 31 பேர் மருத்துவர்களாக உள்ளனர்.
மேலும், சமீபத்தில் வெளியான ஆர்பிஎம்டி தேர்வில் 107வது இடத்தைப் பெற்று மருத்துவப் படிப்பிற்குள் நுழைந்துள்ள வீனாவும் படிப்பை முடித்து விட்டால் அவர்களது குடும்பத்தில் மொத்தம் 32 மருத்துவர்கள். இந்நிலையில், ஜெய்பூரில் அவரது குடும்பத்தையே ‘ஜெய்பூர் டாக்டர் பரிவார்’ என்றுதான் அழைக்கின்றனர். இவரது வீட்டில் 7 பொது மருத்துவர்கள், 5 குழந்தைப் பேறு மருத்துவர்கள், 3 கண் மருத்துவர்கள், 3 காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள், 3 நரம்பியல் வல்லுனர்கள் என வெவ்வேறுதுறையைச் சேர்ந்த 31 மருத்துவர்கள் உள்ளனர். மேலும், இப்படி ஒரு குடும்பத்தில் பிறந்ததற்காக நான் மிகவும் பெருமைப் படுகின்றேன் என்று வீனாமிரிதா தெரிவித்துள்ளார்.
|