Gogoro எனும் இலத்திரனியல் ஸ்கூட்டர் ஒன்று CES (Consumer Electronics Show) நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.முற்றிலும் மின்கலத்தின் உதவியுடன் இயங்கும் இந்த ஸ்கூட்டர் மணிக்கு 95 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக்கூடியதாக இருப்பதுடன் 4.2 செக்கன்களில் 50km/h எனும் வேகத்தினை அடையக்கூடியதாகவும் இருக்கின்றது.
எனினும் இதன் விலை வெளியிடப்படாத நிலையில் இந்த வருடம் விற்பனைக்கு வரவுள்ளதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் Megan Zaroda தெரிவித்துள்ளார். |