சமூக வலைத்தளங்கள் வரிசையில் தனக்கென ஒரு இடத்தை டுவிட்டர் பதிவு செய்துள்ளது.
பல மில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள இத்தளத்தில் சில வரையறைகள் காணப்படுகின்றன.
அதாவது ஒரு டுவீட் செய்யும்போது அதிக பட்சம் 140 எழுத்துக்களையே பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.
இந்த மட்டுப்படுத்தல் பயனர்களிடையே அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது.
அதிலும் @Name என டுவீட் செய்யும்போது @ என்ற குறியீட்டினையும் ஒரு எழுத்தாக கணக்கிடுகின்றது.
ஆனால் புதிய மாற்றத்தின் படி இக் குறை நீக்கப்பட்டுவிடும் என டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தவிர வீடியோக்கள், அனிமேசன் கோப்புக்கள், கருத்துக்கணிப்புக்கள் என்பவற்றிலுள்ள கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படவுள்ளது.
இப்புதிய சேவையினை எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.