கஜகஸ்தான் நாட்டில் சிறுவன் ஒருவன் மது மற்றும் சிகரெட் குடிப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
இரண்டு நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், 5 வயது மதிக்கத்தக்க சிறுவன், முதலில் ஆல்கஹாலை குடிக்கிறான், பின்னர் யாரோ ஒரு நபர் அவனுக்கு சிகரெட்டை கொடுக்கிறார். அதனை வாங்கிய சிறுவன், அந்த சிகரட்டை வாயில் வைத்து நன்றாக இழுத்து புகைவிடுகிறான். மேலும், கமெராவிற்கு பின்னால் இருப்பவர்கள் அந்த சிறுவனை உற்சாகப்படுத்துகிறார்கள், ஒரு கட்டத்தில்ல் ஒரு நபர் இச்சிறுவனுக்கு “cheers” சொல்கிறார். இந்த சிறுவன் இதெல்லாமல் சர்வசாதாரணம் என்று கூறுகிறான். தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி ஆயிரக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. இணையத்தில் வெளியான இந்த வீடியோவை வைத்து பொலிசார் அச்சிறுவனை தேடி வருகின்றனர். |