அத்துரலிய ரதன தேரர் முன்னெடுத்திருந்த உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்துள்ளார்

412

நாடாளுமன்ற உறுப்பினர் வணக்கத்துக்குரிய அத்துரலிய ரதன தேரர் முன்னெடுத்திருந்த உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்துள்ளார்.

கடந்த நான்கு தினங்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்த அத்துரலிய ரதன தேரர் சற்று முன்னர் தனது உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்வதாக அறிவித்துள்ளார்.

மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவால் முன்னாள் மேல் மாகாண அளுநர் அசாத் சாலி , முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஆகியோர் பதவி விலகியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் தனது உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்வதாக அறிவித்துள்ளார்.

உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்த பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அமைச்சர் ரிசாத் பதியுதீன் , முன்னாள் மேல் மாகாண அளுநர் அசாத் சாலி , முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவியில் இருந்து நீக்குமாறு கோரி அவர் இந்த உண்ணாவிரத போராட்டத்தை கடந்த வௌ்ளிக்கிழமை முதல் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE