அநுரவின் சுவரொட்டியால் சர்ச்சை – கல்வி சமூகம் விசனம்

113

 

அநுரகுமார திசாநாயக்க (Anura kumara dissanayaka) யாழ்ப்பாணம் (Jaffna) வருவதை முன்னிட்டு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் வடக்கு மாகாணக் கல்விப்புலத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தால், அநுரகுமாரவின் (Anura kumara dissanayaka) வருகை தொடர்பான சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்திலுள்ள (Jaffna) பாடசாலைகளின் மதில்களில், வாசல்களில் ஒட்டப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சுக்கு முறைப்பாடு
இவ்வாறான சுவரொட்டிகள் பாடசாலை மதில்களில் ஒட்டப்பட்டுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆராயப்பட்டு அவற்றை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

SHARE