நடிகர் சிம்பு இன்று தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். சிறு வயதில் இருந்தே சினிமாவில் பயணித்து வரும் நடிகர் சிம்பு கடைசியாக பத்து தல படத்தில் நடித்திருந்தனர்.
மேலும் தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் STR 48 படத்தில் நடிக்கவுள்ளார். வரலாற்று கதையம்சத்தில் உருவாகவுள்ள இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சிம்பு தனது திரை வாழ்க்கையில் நடித்த சிறந்த திரைப்படங்களில் ஒன்று விண்ணைத்தாண்டி வருவாயா. கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சிம்பு, திரிஷா ஜோடியாக நடித்திருந்தனர். மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது சிம்பு கிடையாதாம்.
வாய்ப்பை மிஸ் செய்த நடிகர்
படத்தில் வரும் கதாநாயகன், பார்க்க நம் பக்கத்து வீட்டு பையன் போல் இருக்க வேண்டும் என்பதற்காக நடிகர் தனுஷை தான் முதலில் கமிட் செய்து வைத்திருந்தாராம் இயக்குனர் கவுதம் மேனன். தனுஷும் கதை கேட்டு ஓகே செய்துவிட்டாராம்.
பின் சில சூழ்நிலைகள் காரணமாக இப்படத்தில் தனுஷால் நடிக்க முடியாமல் போய்விட்டது. இதன்பின் சிம்புவை கமிட் செய்துள்ளார். இந்த தகவலை இயக்குனர் கவுதம் மேனன் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார் என சொல்லப்படுகிறது.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை தவறவிட்ட தனுஷ், அதே கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.