அனுமதிப் பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுப்பட்ட நான்கு பேர் கைது

224

திருகோணமலை – கல்லடிப்பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுப்பட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் கல்லடி பகுதியில் நேற்று வியாழக்கிழமை மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர் என கடற்படை தெரிவித்தது.

குறித்த சந்தேக நபர்கள் மகாவலி கங்கையில் மணல் அகழ்வில் ஈடுப்பட்டு கொண்டிருந்துள்ளதுடன், அவர்களிடம் அதற்கான அனுமதிப் பத்திரமும் இருக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து ஒரு தொகை மணலும் , டிரக்ட்டர் வாகனமொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்தது.

SHARE