அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் ஒன்றிணைவு, சிங்களப் பேரினவாதிகளுக்கு எதிரான சாவுமணி

382

தமிழ் பேசும் மக்கள் என்கிற வகையில் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு அரசி யலில் பயணிப்பதே சிறந்த தொன்றாகும். மறைந்த சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலை வர் அஷ்ரப் அவர்களின் மறைவுக்குப் பின்னர், முஸ்லீம் அரசியல்வாதிகள் தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து பயணிக்கத் தயாராகவில்லை. இருந்தாலும் தமிழ் மக்களுக்கான தனி அலகு என்கிற விடயத்திலும், முஸ்லீம் மக்களுக்கான தனி அலகு என்கிற விடயத்திலும் இன்னமும் இவ்விரு தரப்பினரும் பிளவு பட்டவர்களாகவே இருக்கிறார்கள். தமிழ் மக்களுக்கானதொரு தனி அலகு உருவாக்கப்பட வேண்டும் என்பதில் முஸ்லீம் கட்சிகள் விருப்பமற்றுச் செயற்படுவது என்பது அரசியலில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ள அதேநேரம், தமிழ்க் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமையில்லாத நிலை என்பதும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும் முஸ்லீம் அரசியல் வாதிகளின் ஒற்றுமையைப் பார்க்கின்றபோது, இலங்கை வாழ் அரசியல் தலைமைகள் மத்தியில் பாரிய திருப்புமுனை ஏற்பட்டிருக்கிறது. ‘இன்ஷா அல்லாஹ்’ என்கிற ஒரு வார்த்தைக்குக் கட்டுப் பட்டவர்களாக அனைத்து முஸ்லீம் கட்சிகளும், ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பின்னர் ஒன்றிணைந்து நிற்பது, பிளவு பட்டிருக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு ஒரு படிப்பினையாக உள்ளது.

அதேநேரம் இக்குண்டுத் தாக்குதலின் போது அடிப்படை முஸ்லீம் தீவிரவாதிகள் அப்பாவிப் பொதுமக்களை இலக்குவைத்து தாக்கியிருப்பதும் முஸ்லீம் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்குத் தடையாகவே உள்ளது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தமிழ் பேசும் மக்களிடையே பிரிவினையை உருவாக்கி, இது பௌத்த நாடு என்று நிலைநாட்டுவது தான் அவர்களது ஒரேயொரு குறிக்கோள். அதற்கமையவே அவர்களின் செயற்பாடுகள் தீவி ரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதைக் காண்கிறோம்.

  

கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்த்தேசிய அரசியலில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று தேசியத்திற்காகக் குரல் கொடுத்த 35இற்கும் மேற்பட்ட தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலர் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டனர். பலர் நாட்டை விட்டு வெளியேறியிருக்கின்றனர். சிலருக்கு நடந்தது என்னவென்று இதுவரை தெரியவில்லை. அதை விட தமிழ்த்தேசியம் பேசிய பல புத்திஜீவிகள் கொல்லப்பட்டனர்.

தமிழ்த் தேசியம் பேசிய அரசியல்வாதிகளான சிவநாதன் கிஷோர், கனகரத்தினம், பத்மினி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வெள்ளிமலை, தங்கேஸ்வரி, பியசேன போன்றோர் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பிலிருந்து விலக்கப் பட்டார்கள். விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் போனஸ் ஆசனம் அடங்கலாக 22 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று போனஸ் ஆசனம் அடங்கலாக 17 உறுப்பினர்களையே பெற்றிருக்கிறது. இதற்கு என்ன காரணம்?
தற்போது சமாதா னம் ஏற்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. மக்கள் சுதந்திரமாக நடமாடவும், தேர்தலைச் சந்திக்கவும் முடிந்திருக்கிறது என்று உங்களால் கூறப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் என இன்னும் பல கட்சிகள், சிவில் அமைப்புக்கள் என அனைத்தும் தமிழ் மக்களைப் பிரதிபலிப்பவர்களாகவே தமிழ் மக்கள் மத்தியில் வலம் வருகின்றனர்.

தமிழ் மக்களின் ஏகோபித்த வாக்குகளால் வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்தும் செயற்பாடுகளில் தான் ஏனைய தமிழ்க் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றார்கள். இதனை இதுவரை காலமும் ஏன் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் மாறி மாறி துரோகி என்றே கூறுகிறார்கள். இவர்களுக்கிடையில் ஒற்றுமை யின்மையால் தான் தமிழ் மக்களின் பலம் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. அரசின் ஒட்டுண்ணிகளான கருணா, பிள்ளையான், டக்ளஸ் தேவா னந்தா மற்றும் சிலர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிலர் இவர்கள் அனைவரும் தான் ஒற்றுமையினைச் சீர்குலைக்கும் நோக்கில் செயற்படுகின்றனர். இவர்களின் இவ்வாறான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்கள் அனைவரும் ஏன் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை குறித்து சிந்திக்கக்கூடாது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலகட்டத்தில் யுத்த செயற்பாடுகளினாலும், தமது உயிருக்கு அச்சுறுத்தல் என்று கூறிக்கொண்டனர். இதனால் தான் தாம் சுயமாக அரசியல் செய்யமுடியவில்லை என குறித்த தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் அப்போது கூறிக் கொண்டிருந்தார்கள். தற்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், தமிழ் மக்களுடைய விடுதலைக்காக ஏன் ஒருமித்துக் குரல் கொடுக்க முடியாது. இன்று ஏன் நீங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒரே கொள்கையுடன் செயற்பட முடியாது. இதற்குத் தடையாக இருப்பது என்ன?

மலையக மக்களைப் பிரதி நிதித்துவப்படுத்தத்தான் ஈரோஸ் ஆரம்பிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த பாலகுமார் அவர்களிடம், இக்கட்சியானது மலையக மக்களை இணைத்துக் கொண்டு பயணிக்கவேண்டும் என்று தான் இக்கட்சி அவரிடம் கையளிக்கப்பட்டது. இச் செயற்பாடுகள் இவரது மூலம் வெகு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
பின் நாட்களில் மாவிலா றில் ஆரம்பித்த யுத்தம் முள்ளி வாய்க்காலில் முடிந்த கையோடு அரசியலில் பல மாற்றங்கள் பல்வேறு வடிவங்களாக உருவெடுத்தது. திடீரென தமிழினத்தை இரட்சிக்க வந்தவர்கள் போன்று அரச அடி வருடிகள் பலர் தமிழ் மக்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்தி, மாற்றுத் தலைமைகளை உருவாக்கி, ஒரு வரை ஒருவர் காட்டிக் கொடுப்பதும், சுட்டுத்தள்ளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. இதனால் 2000இற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டார்கள். கருணா – பிரபா பிளவு என்பது 700க்கும் மேற்பட்ட போராளிகள் அழிவதற்கும் காரணமாகவிருந்தது. 1990 காலப்பகுதியில் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் என பல்வேறு தரப்பினராலும் கொலைகள் நடந்தேறியது. தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற கொள்கையுடன் புறப்பட்டவர்கள் தமது இனத்தையே அழிக்கும் துர்ப்பாக்கிய சம்பவம் இந்நாட்டில் நடந்தேறியிருக்கிறது. இதனை தமிழ் மக்கள் இன்னமும் மறக்கவில்லை. மறக்கக்கூடிய சம்பவங்களா அவை.

தமிழ்த் தாயின் மார்பில் பால் குடித்த எந்தத் தமிழனும் சிங்கள இனத்துடன் இணைந்து செயற்பட மாட்டான். தமிழ்க் கட்சிகளுக்குள் ஒற்றுமையை நிலைநாட்டுவதில் இருக்கும் பிரச்சினைகளை முத லில் கண்டறிந்து, அதற்கான வியூகங்களை வகுப்பதன் ஊடா கவே எமது உரிமைகளை நாம் பெற்றுக்கொள்ளலாம் அல்லது தேசியம், சுயநிர்ணய உரி மையை வென்றெடுக்கும் நோக்கில் அஹிம்சை ரீதியான போராட்டங்களை முன்னெடுக் கலாம். ஒரு இனத்திற்குள் ஒற்றுமை என்பது மிக அவசியமானது.

  

தொடர்ந்தும் இவர்கள் மாறி மாறி துரோகிகள் என்று கூறிக் கொண்டிருப்பதனால், தமிழினம் பாதாளம் நோக்கிப் பயணிக்கிறது என்பது தான் உண்மை. பிரி வினை வாதத்தினை அரசாங்கம் வில்லியம் கோபல்லாவ தொடக்கம் மைத்திரிபால சிறிசேன வரை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் விதைத்தே வந்திருக்கிறார்கள். இனியும் இந்நிலை தான் தொடரப் போகின்றது. தமிழினத்தை ஒரு அடிமை இனமாக நடத்தி வந்திருக்கிறார்கள் என்பது வர லாறு. இந்த அடிமைத்தனமாக வரலாற்றிலிருந்து தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் வெளி யில் வருவதற்கு தயங்குகிறார்கள். சூடு, சொரணை அற்றவர்களாக இந்த அரசியல் தலைவர்கள் வலம் வருவது தமிழினத்திற்கு சாபக்கேடு என்று தான் கூறவேண்டும். அது மாத்திரமன்றி இவர்களது செயற்பாடுகள் உலகளாவிய ரீதியில் பெரும் அவமானத்தையே ஏற்படுத்தியுள்ளது.

தமிழின விடுதலைக்காக அஹிம்சை, ஆயுத ரீதியாக இறுதிவரைப் போராடிய பெருந்தலைவனாக பிரபாகரன் இன்றும் பேசப்படுவதற்குக் காரணம் அவர் கொள்கையில் கொண்ட பற்றுறுதி தான். தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாகச் செயற்பட்டார். தனக்காக எந்தவொரு சொத்துக்களையும் அவர் சேர்க்கவில்லை. இன்றும் அவர் தமிழ் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தத் தலைவராக வலம் வருகிறார். ஆகவே தமிழ் அரசி யல் தலைமைகள் ஒன்றிணைச் சிந்திக்கவேண்டும். உங்களது சுக போக வாழ்வை அனுபவிப்பதற்காக தமிழ் மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்தக்கூடாது. அரசின் அற்ப சொற்ப சலுகைகளுக்காக அடிமையாகக்கூடாது. அரசின் போலியான வாக்குறுதிகளை இனியும் நம்பக்கூடாது. உங்களது வீரம் பேச்சில் வேண்டாம் மாறாக செயற்பாட்டில் இருக்கட்டும் என்பதனையே நாம் வலியுறுத்திக் கூறவிரும்புகிறோம்.

அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இதுவே உங்களுக்கான இறுதிச் சந்தர்ப்பமாகக் கருதி மிக விரைவில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். அதற்குத் தயாராகுங்கள். அதற்காக ‘தமிழ்க் கட்சிகளின் ஒன்றியம்;;’ என ஒன்று உருவாக்கப்படவேண்டும். இதன் ஊடாகவே இனிவரும் காலங்களில் தமிழினம் பலம் பெறும். அப்போது தான் தமிழ் மக்களது வாழ்வில் சுபீட்சம் ஏற்படும். எதிர்வரும் சந்ததியாவது தமிழனாய் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ இது வழிவகுக்கும் என்பதே இக்கட்டுரையின் பிரதான நோக்கம்.

‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’

– இரணியன் –

SHARE